💡மாறும் பாதைகள் 💡




அவளுக்கு 

டியூப்லைட்டைப்  பிடிக்கவே இல்லை 

மங்கலாக இருக்கும் 

குட்டி பல்பையே 

புன்னகைக்க வைக்கிறாள் 

டியூப்லைட் விரிந்து சிரிப்பதற்கும்

குட்டி பல்பிடம் தோற்று இருளடைவதற்கும்  இடையே 

டக் டக் 

ஸ்விட்ச் துடுப்புகளை 

இசைத்துக் கொண்டே 

நகருகிறோம் 

ஒயர்கள் செல்லும் 

மர்மப்பாதையில் 

சுற்றிச் சுற்றி ஓடும் போதே 

கண் மறைந்து விடுகிறது 

குட்டி பல்புக்குள்  

சிரித்துக் கொண்டிருக்கிறேன் 

வெண்ணிறத் தலைவலியாக 

ஓடிக்கொண்டிருக்கும் 

ட்யூப் லைட்டுக்குள்  

வெடிப்பதற்காகப்  

பொங்குகிறாள்.

Comments