Skip to main content

Posts

Featured

அழியாத சாட்சியம்

   பிடுங்கிய மலர்களை உயிருள்ள மலர்களினிடையே  செடியில் நான்  சூடியிருக்கக் கூடாது. தொட்டுப் பார்த்துக்  காற்றிலாடி விளையாடத்  துவங்கும்போது பயம் கூடிவிட்டது. புகைப்படத்துக்காகவே  அழைத்து வந்தேன்  போகலாம்  என்கிறேன். பூங்காவின்  வட்ட ராட்டினத்திலிருந்து  இறங்க விரும்பாத குழந்தைகளாய்  தலையாட்டுகின்றன எல்லா மலர்களும்  புகைப்படத்தை  நிரந்தரமாக  அழித்துவிட்டு செடியின் காலடியில்  மண்டியிடுகிறேன்  தலைவாரி முடித்து ஓடிவரும் மகளுக்காக  ஒரேயொரு மலரை  உதிர்க்கிறது செடி.

Latest posts

உலகக் கவிதைகளின் வாசல்

நாளாம் நாளாம்

வாசனை முகூர்த்தம்

புதிதினும் புதிது

பாய்மம்

அவசரம் இல்லாத நாள்

அசாதாரணத்திலிருந்து சாதாரணத்துக்கு

ஒரு ஸ்க்ரோல்

வெண்பாறை இட்லித்தட்டு

சமன் குலைவு