புயலிலே ஒரு கேப்டன்

 


விளையாட அழைக்கிறது 

குழந்தை 

முன்பு போல 

கேப்டனாக முடிவதில்லை அவனால்

கடலைத் தரையாக்கியவன்

கப்பலைக் கட்டிலாக்கி விட்டான்.

வீட்டுப்பாடத்தில்

இருவரும் மும்முரமாக இருக்கும் நேரம்  

கப்பலுக்கு அடியில் 

ஊளையிட்டு அழைக்கிறது

புயல்.

முதுகைத் தழுவும் புயலின் கைகளை

அத்தனை விரைவாகத்

தட்டிவிடுகிறது

குழந்தை.

கேப்டனுக்கு கலங்குகிறது 

அடிவயிறு. 





Comments