பகலிலும் எரியும் விளக்கு
விட்டு விட்டு எரியும் இந்த விளக்கு
பயமுறுத்துவது அல்ல
மென்மையானது
எந்தவிதக் குற்ற உணர்வுமின்றி
பகலிலிலும் எரியக்கூடியது ஆதலால்
எந்தவிதக் குற்ற உணர்வுமின்றி
அதனருகில் வரச்சொல்கிறது
கண்டவுடன் உள்ளிழுக்கும்
வண்ண நதியின் ததும்பும் சுழல்
அதன் கண்களுக்குச்
சொல்லித்தரப்பட்டிருக்கிறது
தூசிபடிந்திருக்கும் அதன் உடல்குறித்து
கவலை கொள்ள வேண்டியதில்லை
அறைக்குள்
அதன் வெளிச்சம்
ஒரு போதும் குறைந்தது இல்லை
வலிகளின் அதிக மின்னழுத்தத்திலும்
கதறாத
உடையாத
தாங்குதிறனை பழக்கப்படுத்தியிருக்கிறது
எச்சில் மழையை
அடிக்கும் வெயிலை
மூச்சுமுட்டும் புகையை
ஒரே போலவே
ஏற்றுக்கொள்கிறது.
உயிரிழை அறுந்து போகும் நாள்
முன்பே கணிக்கப்பட்டு
தூர வீசப்படுகிற வரை
அதன்
ஒளி குறித்து
யாருக்கும்
எவ்வித சந்தேகமும்
வரவே இல்லை.
காற்று வெளி செப்டம்பர் 2019
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment