கடைசியாக எப்போது பார்த்தாள்

  


கடைசியாக 

எப்போது பார்த்தாள் 

சற்று முன்புதான்  

மறைக்கப்பட்டிருக்கிறது 

வெண்ணிறத்தில் 

ஒளிரும் புள்ளி 

மூளையிலிருந்து உறிஞ்சுகிறது 

உறக்கத்தை 


புள்ளியைத் 

தொட்டுப் பெரிதாக்கி 

கண்களைத் தேடுகிறான் 

அழிக்கப்பட்ட உரையாடல்கள் 

பாலையாக மாற்றுகிறது 

இரவின் வெளியை 


மாபெரும் 

இன்சோம்னியாக் கடலுக்குள் 

பச்சையாக ஒளிரும் புள்ளியைக் 

கெட்டியாகப் பிடித்தபடி 

ஆயிரம் பேர் 

நீந்திக் கொண்டிருக்கிறார்கள் 

முன்னே செல்லும் படகில் 

அழைத்துக் கொண்டிருப்பவளும் 

கடைசியாகப் பார்த்ததை 

மறைத்தவள்தானா  


ஒளிப்புள்ளிகள் 

படபடவெனப் பறந்து 

இரவைத் திண்ணும் 

விநோத மணத்தை 

சுவாசித்தபடியே 

கடைசியாகப் பார்த்த 

கணத்துக்காக 

காத்திருக்கிறான் 

அவளுக்கும் 

அவளது 

ஃபோனுக்குமான 

நெடுந்தொலைவில்.



பரவி - ஜனவரி 2022

Comments