ஒத்ததிர்வு

 


முன்பு நின்றிருந்த எலும்புகள் பேசுகின்றன 

"இன்னும் கொஞ்சம் அடித்தால் போதும் 

ஒத்ததிர்வு உள்ளே தோன்றிவிடும் "


அவனுக்குப் பின்னால் நின்றிருந்தவர்கள் 

அடிக்கும் முன்பே பொருந்தி 

இவ்விடத்திலிருந்து 

விடுதலை பெற்று விடுவோமென்று 

தண்டுவடத்தை உலுக்குகிறார்கள்


வயிற்றுக்கு வருகிறது இசைக்கவை 

பதினைந்துதானே எங்கள் கணக்கு

உனக்கெப்படி பதினெட்டு காட்டுகிறது 

கணக்கிடும் கருவியை எட்டி உதைக்கின்றனர் 


வலியில் கதறுகிறது  தொப்பூழ் 


பேரியந்திரங்களின் நடைபாதையில் 

மண்முழுவதும் அடங்கி 

ஒடுங்கியிருக்கிறது

ஒத்ததிர்வில் 


செடிகளில் இனி

முளைத்தெழும் நாவுகள் இல்லை 

ஒரே சாயலில் மலர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன 


நெஞ்சுக்கு நேரே நிற்கும் இசைக்கவையிடம் 

சீக்கிரம் கொல் என்கிறான் 

மூன்றைக் குறைத்து விட்டாயா என

மீளவும் வருகிறார்கள் வீரர்கள் 



நன்றி : வாசகசாலை



Comments