சிரிப்பாக மாற முடியாதவன்
சிரிப்புக் கோட்டைக்குள்
புகவே முடியவில்லை
மோதி
முகம் உடைந்து
தோற்றுத் திரும்புகிறான்
சிரிப்பை அடுக்கி
சிரிப்பைப் பூசி
வானாதி மாடங்களை
கட்டிக் கொண்டே வளருகிறார்கள்
புத்திளம் பெண்கள்
நின்றாடும்
சிரிப்பைப் பிடுங்கி
சரித்து விடுவதற்காக
அடிவாரத்தில் காத்திருக்கிறான்
உச்சியிலிருந்து
பறந்து செல்லும் சிரிப்பு
ஆதி சூரியனின் வாயில் அமர்ந்து
கொக்கரிக்கிறது.
யாவரும் ஜனவரி 2023
.jpeg)

Comments
Post a Comment