நைட்டியின் முத்தங்கள்
💨 நைட்டியின் முத்தங்கள் 💨
பறந்து வந்த நைட்டி
மழையீரத்துடன் அணைக்கிறது
ஆக்ஸிலேட்டர் திருகியபடி
அவசர ஸ்கூட்டியில்
கொதித்துக் கொண்டிருந்த
யூனிஃபார்ம் தங்கையை
யூனிஃபார்ம் அக்காவை
யூனிஃபார்ம் அம்மாவையும்
மொட்டை மாடியிலிருந்து
ஓடிவந்தவள்
மன்னிப்பு கேட்டுவிட்டு
ஒவ்வொருவர் கன்னங்களையும்
தட்டிக் கொஞ்சுகிறாள்
ஏற்கனவே
அந்த நைட்டி
குளிராக முத்தமிட்டதைப் போல.
:யாவரும் ஜனவரி 2023
.jpeg)

Comments
Post a Comment