🔘முன்னெப்போதும் பிறந்திராத வார்த்தைகள் 🔘

 


ஆழத்திலிருந்து

ஒவ்வொரு முத்தாய்

திக்கித் திக்கிக்  கோர்ப்பவன்

இல்லாத படிக்கட்டுகளில்

உருண்டு கொண்டிருந்தான்

ஆழத்தைக் காய்ச்சி

உச்சந்தலையில் கொதிக்க விட்டவள்

மொத்தமாகத் துப்பினாள்

தெறித்து அலறிய சிலம்பு

“மயிர் புடுங்கி” என்றது

இன்னும் இன்னும்

கொதித்த குழம்பிலிருந்து

துள்ளிக் குதித்த

பரல்களெங்கும்

முன்னெப்போதும்

பிறந்திராத வார்த்தைகள்

கொதி பொறுக்காது

நெஞ்சழிந்த போது

அரற்றியது கவிதை

“மயிர் புடுங்கி

 மயிர் புடுங்கி”


கூச்செறிந்து நின்றது மயிர். 

 : யாவரும் ஜனவரி 2023 





Comments