புதிதினும் புதிது





பறக்க விரும்புகின்றன 

உலர்ந்து கொண்டிருக்கும் ஆடைகள்

கை கால்களை விரித்து 

பழைய உடல்களிடமிருந்து

விடுதலையாகி 

புதிய சமவெளிகளுக்குப் பயணிக்கவும்

மழைச்சேற்றில் அழுக்காகி 

நாய்கள்  கடித்து விளையாடவும் 

அடையாளம் மங்கி 

பூர்வநாளில் அணிந்தவர்களால் 

கைவிடப்படுவதற்காகவும்.

பைத்தியங்களின் கூடாரத்துக்குள் 

அந்த நாளின் வண்ணமாக 

சூடிக்கொள்ளப் படுவதற்காகவும்.



Comments