ஒரு ஸ்க்ரோல்

 ஒரு ரீல் 

மரணத்தைக்  கடந்து செல்கிறது 

ஒரு ஸ்டேட்டஸ் 

பிரிவை அழுகையில்லாமலாக்குகிறது 

ஒரு ஸ்டோரி 

துரோகங்களை  மழுங்கடிக்கிறது 

ஒரு ஷாட்ஸ் 

பலவீனங்களை 

ருசியுள்ள பண்டமாக்குகிறது 

ஒரு ஸ்க்ரோல் 

மொத்த பிரபஞ்சத்தையும் 

காணாமல் போகச் செய்கிறது




Comments