விளையாட்டு
குழந்தை எங்கோ சென்றுவிட்டது.
விளையாட்டு
இன்னும் முடியவில்லை
பூமியும்
காற்றும்
அடித்தடித்து ஆடுகிறது
கைவிடப்பட்ட ஆப்பிள் பலூனை.
முன்னைக்கு ஒரு சுற்று
வேகமாக சுழல்கிறது மின்விசிறி
கலைந்து கிடக்கும் ஆடைகள்
ஒலியெழுப்பாது கை தட்டுகின்றன.
யாருமற்ற அறைகளில்
வசீகரத் திகிலுடன்
இப்படித்தான்
நிகழ்ந்து கொண்டிருக்கின்றனவா
எல்லா விளையாட்டுகளும்?


Comments
Post a Comment