தாமதக்காரன்
அன்றாடம் ஓடிப்பிடித்து ஏறும் ரயிலை
தவறவிட்டதன் வாயிலாக
இன்று எல்லாவற்றையும்
தாமதப்படுத்த இயலுகிறது என்னால்.
ஒருபோதும் நான் அமர்ந்திடாத
குளிர்ச்சியுறங்கும் கல் பெஞ்சில்
கைவிரல்களை வைத்ததும்
அடையாளத்தை அறிந்து
ஏந்திக் கொள்ளத் தொடங்குகிறது.
ஒவ்வொரு ரேகையிலும்
மழைக்குளிரின் பாய்ச்சல்.
கல்லும் தேகமும்
உணர்வாடலில் கரைந்துருக
இன்னும் கொஞ்சம்
உட்கார்ந்திருந்தால் போதும்.
தாமதக்காரனாகி விட்டபிறகு
சிலிர்த்துக் கொண்டே விழிக்கிறது
அமருகிற
இடமெல்லாம்.
Comments
Post a Comment